Sweets | Cake | துர்நாற்றம் எடுத்த ஐஸ் கேக் - பிரபல பேக்கரியில் அரங்கேறிய அதிர்ச்சி
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே பிரபல பேக்கரியில் ராஜ்குமார் என்பவர் ஐஸ் கேக் வாங்கியுள்ளார். அதனை குழந்தைக்கு சாப்பிட குடுத்தபோது, கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து கேக்கை திறந்து பார்த்ததில் கேக் கெட்டுபோனது தெரியவந்தது. இது குறித்து ராஜ்குமார் உணவுபாதுகாப்புத் துறையில் புகாரளித்த நிலையில், அதிகாரிகள் பேக்கரியில் சோதனை மேற்கொண்டு கெட்டுப்போன கேக் போன்றவற்றை பறிமுதல் செய்து கடையை பூட்டி சீல் வைத்தனர்.
Next Story
