Fire | கேஸ் கசிவால் தீ பிடித்து மளமளவென எரிந்த பேக்கரி - அலறியடித்து ஓடிய பணியாளர்கள்
கேஸ் கசிவால் தீ பிடித்து மளமளவென எரிந்த பேக்கரி - அலறியடித்து ஓடிய பணியாளர்கள்
Fire | கேஸ் கசிவால் தீ பிடித்து மளமளவென எரிந்த பேக்கரி - அலறியடித்து ஓடிய பணியாளர்கள் #vellore #fire #fireaccident #thanthitv வேலூர் மாவட்டம் அரியூரில் உள்ள தனியார் பேக்கரியின் தயாரிப்புக் கூடத்தில் கேஸ் கசிவால் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. முதல் மாடியில் தீப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கிருந்த பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால், தீ மளமளவெனப் பரவியதால் அலறியடித்து வெளியேறி உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், அங்கிருந்த சிலிண்டர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி தீயை முழுமையாக அணைத்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், பேக்கரி தயாரிப்புக் கூடத்தில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. விபத்து குறித்து அரியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
