வங்கிக்காக போட்ட பக்கா ஸ்கெட்ச்..ஆனால் இது மட்டும் நடக்கவே இல்லை..சென்னையில் அதிர்ச்சி

சென்னை ஆவடியில், அரசு வங்கிக் கிளையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆவடி சி.டி.எச். சாலையில் செயல்பட்டு வரும் அரசு வங்கிக் கிளையை, மேலாளர் சிவாதேவி என்பவர், வழக்கம்போல் திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற குற்றப்பிரிவு போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்தனர். மேலும், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com