``ஆயுள் தண்டனையில் ஜாமின் மனு..'' மதுரை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

x

24 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற லாக்கப் டெத் விவகாரத்தில் தூத்துக்குடியில் 1999 இல் நடைபெற்ற லாக்கப் டெத் தொடர்பான வழக்கில் 25 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி, குற்றம்சாட்டப்பட்ட 11 போலீசாரில் பேரில் இரண்டு பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், டி.எஸ்.பி., உள்ளிட்ட 9 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனையை நிறுத்தி வைத்து தங்களுக்கு ஜாமின் வழங்க கோரி டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 4 போலீசார் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பில் தண்டனையை நிறுத்தி வைத்து இடைக்கால ஜாமின் வழங்கக் கூடாது என வாதிடப்பட்டது..

இதையடுத்து நீதிபதிகள், விசாரணை நீதிமன்றம் மனுதாரர்களின் வழக்கை விசாரித்து போதிய குற்றச்சாட்டின் முகாந்திரம் அடிப்படையில் தண்டனை வழங்கி உள்ளது என கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்