புதுக்கோட்டை பெட்ரோல் பங்கில் பகீர் திருட்டு... அதிர்ச்சி CCTV
புதுக்கோட்டையில், நள்ளிரவில், பங்கில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஒரு பைக்கில் இருந்து மர்ம நபர்கள், பெட்ரோலை திருட சென்றுள்ளனர். ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் உள்ள பெட்ரோல் பங்கில், நள்ளிரவில் பெட்ரோல் போடுவதற்காக மர்மநபர்கள் வந்துள்ளனர். ஆனால், கணக்கு வழக்குகளை முடித்துவிட்டு பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உறங்கிக் கொண்டு இருந்த நிலையில், என்ன செய்வது என யோசித்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஒரு பைக்கிலிருந்து பெட்ரோலை திருடி, தங்கள் பைக்கில் ஊற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது..
Next Story
