Athletics Competition | பின்னோக்கி ஓடும் தடகள போட்டி - உலக சாதனை படைத்த அரியலூர் இளைஞர்

x

ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற பின்னோக்கி ஓடும் தடகள போட்டியில், அரியலூர் இளைஞர் உலக சாதனை படைத்துள்ளார். கீழப்பழூர் அருகேயுள்ள நொச்சிக்குளத்தை சேர்ந்த ஆறுபடையப்பா என்பவர், பின்னோக்கி ஓடும் தடகள போட்டிக்கு பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் லயனிஸ் வேர்ல்டு ரெக்கார்ட் குழு சார்பில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று பின்னோக்கி ஓடினார். இதில், 100 மீட்டர் தொலைவை, 13.54 நொடிகளில் கடந்து உடல சாதனை படைத்துள்ளார். இவர் ஏற்கனவே, 14.40 வினாடியில் 100 மீட்டரை பின்னோக்கி ஓடி, பஞ்சாப் இந்தியன் நேஷ்னல் புக் ஆஃப் ரெக்கார்ட்சிலும் இடம் பிடித்துள்ளார். அமெரிக்காவில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றும், அதற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்