புது மாப்பிள்ளை Life-யே சூன்யமாக்கிய `பேச்சிலர் பார்ட்டி’ - சிக்கினார் OG ஐஸ்வர்யா
கஞ்சா பயன்படுத்திய விவகாரத்தில் சப்ளையரான இளம்பெண் கைது
பேச்சிலர் பார்டியில் கஞ்சா பயன்படுத்திய விவகாரத்தில், கஞ்சா சப்ளை செய்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை பட்டினம்பாக்கம் MRC நகர் பகுதியிலுள்ள தனியார் விடுதியின் அறையில் கஞ்சா மற்றும் OG கஞ்சா பயன்படுத்தியதற்காக 11 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் சந்தோஷ் என்பவர் தனது திருமணத்தை முன்னிட்டு நண்பர்களுக்கு பேச்சிலர் பார்டி வைத்தது தெரிய வந்தது. மேலும் திருச்சியை சேர்ந்த பிரேசர் என்பவர் சென்னை ஆவடியில் வசித்துக்கொண்டு, ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்கி விற்பணை செய்தது தெரிய வந்தது. இதில் தலைமறைவாக இருந்த கஞ்சா சப்ளையரான ஐஸ்வர்யாவை போலீசார் கைது செய்தனர். மேலும் அதிர்ச்சி அளிக்கும் விசயம் என்னவென்றால் இவர் விருகம்பாக்கத்திலுள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் குடியிருப்பில் வசித்து கொண்டு கஞ்சா சப்ளை செய்து வந்துள்ளார்.
