காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம்.. நெல்லையப்பர் கோயிலில் கோலாகலம்
நெல்லை நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆடி முளைக்கட்டு திருவிழா கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், நாள்தோறும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, நான்காம் நாள் நிகழ்ச்சியில் ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாள் எழுந்தருள, புதிய வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, வளையல் பூட்டி வளைகாப்பு உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
