அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்ட குழந்தை மர்ம மரணம்... கதறி அழுத பூம் பூம் மாட்டுக்கார குடும்பத்தினர்
ஈரோட்டில் வ.உ. சிதம்பரனார் பூங்கா பகுதியில் வசித்து வரும் பூம்-பூம் மாட்டுக்காரர் ராமன் 5 குழந்தைகளுடன் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அப்போதைய ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர், ராமனின் குழந்தைகளை அரசு காப்பகத்தில் சேர்க்க உத்ரவிட்டார். இதனையடுத்து அவருடைய 4 குழந்தைகள் அங்கு சேர்க்கப்பட்டன.
இந்த நிலையில், அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்ட ராமனின் பெண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காப்பகம் சென்ற ராமனிடம் அந்த பெண் குழந்தை இறந்துவிட்டதாக கூறி உடலை ஒப்படைத்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடந்த ராமன் மற்றும் அவரது உறவினர்கள் தற்போதைய மாவட்ட ஆட்சியர் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காய்ச்சலுக்கு தவறான மாத்திரை கொடுத்ததன் காரணமாகவே குழந்தை இறந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
