ஒசூரில் சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தை : மருத்துவமனையில் ஒப்படைத்த மக்கள்

ஒசூரில், சாலையோரம் வீசப்பட்டு கிடந்த பச்சிளம் குழந்தையை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
ஒசூரில் சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தை : மருத்துவமனையில் ஒப்படைத்த மக்கள்
Published on

ஒசூரில், சாலையோரம் வீசப்பட்டு கிடந்த பச்சிளம் குழந்தையை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். பிறந்து ஒரு மாதம் ஆன அந்த பெண் குழந்தை, உழவர்சந்தையின் பின் பகுதியில் உள்ள சாலையில் கிடந்துள்ளது. கடுங்குளிரால் கதறி அழுது கொண்டிருந்த அந்த குழந்தையை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து, பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தையை மருத்துவர்கள் சிறப்பு கவனம் செலுத்தி பாதுகாத்து வருகின்றனர். இதனிடையே, குழந்தையை சாலையோரத்தில் வீசி சென்றது யார் என்பது குறித்து, போலீஸார் விசாரரண நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com