Babies | ``குழந்தைகளை உடன்பிறப்புகளிடம் இருந்து பிரிக்காதீர்கள்’’ - ஐகோர்ட் அதிரடி கருத்து

``குழந்தைகளை உடன்பிறப்புகளிடம் இருந்து பிரிக்காதீர்கள்’’ - ஐகோர்ட் அதிரடி கருத்து

குழந்தையை உடன்பிறப்புகளிடம் இருந்து தனிமைப்படுத்தக் கூடாது என ஐகோர்ட் மதுரை அமர்வு கருத்து குழந்தைகள் தனித்தனி அறைகளில் பிரித்து வைக்கப்பட வேண்டிய ஏவுகணைகள் அல்ல என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. கணவன் - மனைவி பிரிந்த நிலையில், பெண் குழந்தையை தாயிடமும் ஆண் குழந்தையை தந்தையிடமும் ஒப்படைத்த கீழமை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாய் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், ஒரு குழந்தை தனது உடன்பிறப்புகளிடமிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டு வளர்க்கப்படக் கூடாது எனத் தெரிவித்தார். "குழந்தைகள் தனித்தனி அறைகளில் பிரித்து வைக்கப்பட வேண்டிய ஏவுகணைகள் அல்ல" என்ற முக்கியமான கருத்தை நீதிபதி முன்வைத்தார். தந்தை வெளியூரில் பணிபுரிவதால், இடைக்கால ஏற்பாடாக ஆண் குழந்தையை தாயின் பராமரிப்பில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேசமயம், தந்தை தாயின் வீட்டிற்குச் சென்று இரு குழந்தைகளையும் எவ்விதத் தடையுமின்றிச் சந்திக்க முழு உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை தந்தை குழந்தைகளைச் சந்திக்க தாய் தடை ஏற்படுத்தினால், இந்த உத்தரவை மாற்றியமைக்க தந்தை மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்

X

Thanthi TV
www.thanthitv.com