பள்ளிகளில் 'ப' வடிவ இருக்கை - அமைச்சர் சொன்ன புதிய விஷயம்
வகுப்பறைகளில் மாணவர்களை 'ப' வடிவில் உட்கார வைப்பது கட்டாயம் கிடையாது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனா மரத்தூர் (Jamuna marathur) பகுதியில் உள்ள ஜவ்வாது மலைவாழ் மக்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வடக்கு மண்டல திரளணி நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் இதனை தெரிவித்தார்.
Next Story
