ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து : 15 பேர் காயம்

சத்தியமங்கலம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன், தலை கீழாக கவிழ்ந்தது.
ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து : 15 பேர் காயம்
Published on
சத்தியமங்கலம் அருகே, ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன், தலை கீழாக கவிழ்ந்தது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள தேவிகாபுரம் கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சபரிமலைக்கு ஒரு வேனில் புறப்பட்டுச் சென்றனர். வழியில், பன்னாரி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக, ஈரோடு - சத்தியமங்கலம் சாலையில் சென்றபோது, அரியப்பம்பாளையம் என்ற இடத்தில், சாலையோரமாக வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில், வேனில் இருந்த ஐயப்ப பக்தர்கள் 15 பேர் காயமடைந்தனர். அவர்களை சத்தியமங்கலம் போலீசார் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 7 பேர், படுகாயமடைந்ததால் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com