Ayyapa | தொடங்கிய விரதம்.. காவிரியில் புனித நீராடி மாலை போட்ட ஐயப்ப பக்தர்கள்
தொடங்கிய விரதம்.. காவிரியில் புனித நீராடி மாலை போட்ட ஐயப்ப பக்தர்கள்
Ayyapa | தொடங்கிய விரதம்.. காவிரியில் புனித நீராடி மாலை போட்ட ஐயப்ப பக்தர்கள் #ayyapaa #thanthitv கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் புனித நீராடி விரதத்தைத் தொடங்கினர். ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலை செல்வது ஐயப்ப பக்தர்களின் வழக்கம். அதன்படி, இன்று அதிகாலையிலேயே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடினர். தொடர்ந்து காவி மற்றும் கருப்பு நிற ஆடைகளை அணிந்து, குருசாமிகள் முன்னிலையில் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டனர். இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
