அய்யனார் கோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு : பொதுமக்கள் குளிக்க தடை

ராஜபாளையம், அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
அய்யனார் கோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு : பொதுமக்கள் குளிக்க தடை
Published on

ராஜபாளையம், அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால், அய்யனார் கோவில் காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடைவிதித்துள்ளனர். கனமழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com