ஆயுத பூஜை கொண்டாட்டம் : வீடு, அலுவலகங்களை சுத்தம் செய்து பூஜை

நவராத்திரி பண்டிகையின் முக்கிய நிகழ்வான சரஸ்வதி மற்றும் ஆயுதபூஜை விழா இன்று விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
ஆயுத பூஜை கொண்டாட்டம் : வீடு, அலுவலகங்களை சுத்தம் செய்து பூஜை
Published on

கல்விக்கடவுளான சரஸ்வதியை வணங்கும் வகையில், வீடுகளில் சரஸ்வதி பூஜையும், தொழில், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்களில் ஆயுத பூஜையும் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, அலுவலகம், தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளை சுத்தம் செய்து, பூஜை செய்வது வழக்கம். இதையொட்டி பொரி, அவல், பூ, பழங்கள் ஆகியவற்றை மக்கள் வாங்கி வருகின்றனர்.

ஆயுத பூஜையை முன்னிட்டு, நுழைவாயிலை அலங்கரிக்கும் மாவிலை தோரணம், மலர் மாலைகள், மின்னொளியில் பளபளக்கும் அழகிய தோரணங்கள் விதம், விதமாக விற்பனைக்கு வந்துள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com