ஆயுதபூஜை விடுமுறை - சென்னையில் போக்குவரத்து மாற்றம்
ஆயதபூஜை விடுமுறையை ஒட்டி, சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் நோக்கிச் செல்லும் வாகனங்களின் நெரிசலைத் தவிர்க்க செவ்வாய்க்கிழமை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
அதன்படி, சென்னை மற்றும் ஆவடியில் இருந்து வரும் கனரக வாகனங்கள், பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், திருக்கோவிலூர் வழியாக GSTசாலையை அடைந்து, தங்கள் இலக்கை அடையலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், செங்கல்ட்டு வழியாக சென்னை வரும் வாகனங்கள், காஞ்சிபுரம் சாலை, வாலாஜாபாத், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னை வந்தடையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story
