Virudhunagar | களைகட்டிய ஆயுத பூஜை விற்பனை - குவியும் பொதுமக்கள்.. கடும் வாகன நெரிசல்

களைகட்டிய ஆயுத பூஜை விற்பனை - குவியும் பொதுமக்கள்.. கடும் வாகன நெரிசல்

#Virudhunagar #AyudhaPooja #ThanthiTV

Virudhunagar | களைகட்டிய ஆயுத பூஜை விற்பனை - குவியும் பொதுமக்கள்.. கடும் வாகன நெரிசல் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை பண்டிகைகளை முன்னிட்டு பூஜைப் பொருட்கள் விற்பனை களைகட்டியது.சிவகாசி தேரடி வீதி பஜார் பகுதியில் காலை முதலே பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர். பட்டாசு ஆலைகள், பட்டாசுக் கடைகள், அச்சகங்கள், தொழில் நிறுவனங்கள், வீடுகள் மற்றும் வாகனங்களுக்குப் பூஜை செய்வதற்காக தேங்காய், பொரி, அவல், பூக்கள், பழங்கள், வாழைத் தோரணங்கள் உள்ளிட்ட பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.ஆப்பிள், பேரிக்காய், விளாம்பழம் உள்ளிட்ட பழங்களின் விலை கணிசமாக உயர்ந்திருந்தாலும், பொதுமக்கள் அவற்றை வாங்கிச் சென்றனர். ஒரே நேரத்தில் ஏராளமானோர் கடைவீதிகளில் குவிந்ததால், முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை உருவானது.

X

Thanthi TV
www.thanthitv.com