Villupuram Ayudha Pooja | களைகட்டிய ஆயுத பூஜை - கடைகளில் பொருட்களை வாங்க குவிந்த பொதுமக்கள்
#Villupuram #AyudhaPooja #Celebration #ThanthiTV
Villupuram Ayudha Pooja | களைகட்டிய ஆயுத பூஜை - கடைகளில் பொருட்களை வாங்க குவிந்த பொதுமக்கள் விழுப்புரம் மாவட்டத்தில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், விழுப்புரம் நகரச் சந்தைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பண்டிகைக்குத் தேவையான பூஜைப் பொருட்களை வாங்குவதற்காக, சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் விழுப்புரம் நகருக்கு வந்துள்ளனர். பூக்கள் மற்றும் பல்வேறு பழ வகைகளின் விலைகள் உயர்ந்திருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.இன்று மாலை ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளில் மக்கள் ஈடுபட்டு வரும் நிலையில், சந்தைகளில் விற்பனை களைகட்டியுள்ளது. இதன் காரணமாக விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
