அயனாவரம் சிறுமி வன்கொடுமை வழக்கு : 17 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சென்னை அயனாவரத்தில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் உள்ள 17 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அயனாவரம் சிறுமி வன்கொடுமை வழக்கு : 17 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on
கடந்த ஜூலை மாதம், அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரிந்த லிப்ட் ஆப்ரேட்டர், காவலாளி உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சிறையில் உள்ள 17 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com