தமிழகத்தின் ஏழை எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வெளிநாடுகளைச் சேர்ந்த 78 சுற்றுலாப் பயணிகள், தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இங்கிலாந்து, மெக்ஸிகோ, ஆஸ்திரேலியா, நார்வே, ஸ்பெயின், அர்ஜென்டினா உள்ளிட்ட 12 நாடுகளைச் சோர்ந்த 78 பேர், சென்னை முதல் திருவனந்தபுரம் வரை, 9 நாட்களாக, 32 ஆட்டோக்களில் பயணம் செய்கின்றனர். இன்று தஞ்சை வந்த குழுவினர், பெரியகோவில் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர். இந்தப் பயணம் வரும் ஆறாம் தேதி திருவனந்தபுரத்தில் நிறைவு பெறுகிறது.