Avadi Crime | சுடிதார் போட்ட `அவ்வை சண்முகி' - கத்தியை காட்டி மூதாட்டியிடம் ரெண்டே நிமிடத்தில்..

சுடிதார் போட்ட `அவ்வை சண்முகி' - கத்தியை காட்டி மூதாட்டியிடம் ரெண்டே நிமிடத்தில்..

#Avadi #Crime #Thiruvallur #CCTV #TNPolice #ThanthiTV

Avadi Crime | சுடிதார் போட்டு வீட்டுக்குள் நுழைந்த `அவ்வை சண்முகி' - கத்தியை காட்டி மூதாட்டியிடம் ரெண்டே நிமிடத்தில்.. ஆவடியில் பகீர் சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே மோரை அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி செந்தூர்கனி, வீட்டில் தனியாக இருந்த போது, சுடிதார் அணிந்து பெண் வேடமிட்டு வந்த நபர் ஒருவர், கத்தியைக் காட்டி மிரட்டி அவரது கழுத்தில் இருந்த 5 சவரன் தாலிச் சங்கிலியைப் பறித்துத் தப்பினார். இதில் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த 35 வயதான கால் டாக்சி ஓட்டுநர் வெங்கடேஷ் ராஜா என்பவரே இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. ‘அவ்வை சண்முகி’ பட பாணியில் பெண் வேடமிட்டுச் சென்று, இரண்டே நிமிடத்தில் நகையைப் பறித்துத் திரும்பும் சிசிடிவி பதிவுகளைக் கொண்டு, சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியைக் காவல்துறையினர் கைது செய்து, நகையையும் பறிமுதல் செய்தனர். கடன் பிரச்சனையைத் தீர்ப்பதற்காகவே, மூதாட்டி தனியாக இருப்பதை வெகுநாட்களாக நோட்டமிட்டு இந்தத் திருட்டை நடத்தியதாகக் கைதான வெங்கடேஷ் ராஜா விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com