அவிநாசி - திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

x

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் திருமணம் ஆகி 78 நாட்களே ஆன நிலையில் புதுமணப் பெண் ரிதன்யா (27) காருக்குள் விஷம் அருந்தி தற்கொலை.

கணவன் கவின்குமார் (28) உடல் ரீதியாகவும், கணவன், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி என மூவரும் சேர்ந்து மன ரீதியாகவும் கடுமையான சித்திரவதை செய்து வந்ததாகவும், இனி இந்த வாழ்க்கையை தன்னால் வாழ முடியாது மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க உடன்பாடு இல்லை, ஒருவனுக்கு ஒருத்தி தான் என்றும் தன் சாவிற்கு தனது கணவன் மற்றும் மாமனார் மாமியார் தான் காரணம் என்று உருக்கமாக தனது தந்தைக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ அனுப்பி விட்டு, தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆடியோ விபரம் நேற்று நள்ளிரவு தெரிந்ததை அடுத்து உறவினர்கள் இன்று சம்பந்தப்பட்ட மாமனார் மாமியார் மற்றும் கணவர் மூன்று பேரையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சாலை மறியலில் ஈடுபட்டினர் தற்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கட்டாயமாக சாவின் முன்பு அறிந்து சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது ஆடியோ விசாரணைக்கு பிறகு பரிசோதனை நடைபெற்று உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும்


Next Story

மேலும் செய்திகள்