ரெடியாகும் வாடிவாசல் | "இதுல இவ்வளவு விஷயம் இருக்கா.."
உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி வரும் தை முதல் நாள் ஜனவரி 15, 2026 நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஜல்லிக்கட்டுப் போட்டியின் மிக முக்கியமான பகுதியான வாடிவாசல் அமைக்கும் இடத்தில், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தென்னை மரத் தூண்கள் நடும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
அவனியாபுரத்தில் தண்டவாள(தள்ளுவாடி) வாடிவாசல் அமைக்கப்பட உள்ளது. அந்த வகையில் வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய்ந்து வரும்போது, வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படாத வகையில், இருபுறமும் வலுவான தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. இதற்காக சுமார் 10 அடி முதல் 12 அடி உயரமுள்ள முதிர்ந்த தென்னை மரத் தூண்கள் ஆழமாக நடப்படுகின்றன. மற்ற மரங்களை விட தென்னை மரங்கள் அதிக அதிர்வுகளைத் தாங்கும் வலிமை கொண்டவை என்பதால் இந்த மரங்கள் பன்படுத்தப்படுகின்றன. தண்டவாள வாடிவாசல் என்பதால் கடந்தாண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக காளைகள் அவிழ்க்க வாய்ப்புள்ளது.
