சென்னையில் ரூல்ஸை மீறி வந்த ஆட்டோ - மறித்தும் நிற்காததால் உள்ளே தாவி ஏறி பெண் போலீஸ் செய்த சம்பவம்
சென்னை மயிலாப்பூரில் ஒருவழிப் பாதையில் ஆட்டோவை ஓட்டியதுடன், அதைத் தட்டிக் கேட்ட பெண் காவலரை ஆட்டோவில் ஏற்றி, 50 மீட்டர் தூரம் ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தெற்கு மாட வீதியில், ஒருவழிப் பாதையில் ஆட்டோ ஒன்று எதிர்புறமாக வந்ததைக் கண்டு போக்குவரத்து காவலர் லாவண்யா வழிமறித்துள்ளார். ஆனால், ஓட்டுநர் தப்பிக்க முயன்றபோது, லாவண்யா தாவி ஆட்டோவில் ஏறி அமர்ந்ததால், சுமார் 50 மீட்டர் தூரம் அவரை அழைத்துச் சென்று பின்னர் கீழே இறக்கி விட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
விசாரணையில், ஆட்டோ ஓட்டுநரின் பெயர் மணிகண்டன் என்பதும், மது போதையில் ஆட்டோவை இயக்கியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
