மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்ட கணவன் : மருமகளை காப்பாற்ற சென்ற தாய் - ஆட்டோ ஓட்டுநர் கைது

ஈரோடு அருகே பெட்ரோல் ஊற்றி தீயிட்டதில், மனைவியும், தாயும் சிக்கிய சம்பவத்தில், ஆட்டோ ஓட்டுநர் கைதானார்.
மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்ட கணவன் : மருமகளை காப்பாற்ற சென்ற தாய் - ஆட்டோ ஓட்டுநர் கைது
Published on

சென்னிமலை கே.கே. நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான குமரேசன் மனைவி ரேவதி, இரண்டு மகள்கள் மற்றும் தாயாருடன் வசித்து வருகிறார். மனைவியுடன் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ஆட்டோவில் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி மனைவி மீது தீ வைத்துள்ளார். இதில், அலறி துடித்த, மருமகளை காப்பாற்றச் சென்ற குமரேசனின் தாயாரும் தீயில் சிக்கினார். இதைப் பார்த்த குமரேசன், தாயை மீட்க சென்றதில் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கையில் காயமடைந்த குமரேசன், கைது செய்யப்பட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com