புதுச்சேரியில் 40 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு- மசாஜ் செண்டருக்கு சீல் வைத்த அதிகாரிகள்
புதுச்சேரியில் 17 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 40 பேர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 17 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 40 பேர் மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த வாரம் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தபட்ட 10 பெண்கள் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். இதில் 17 வயது சிறுமி ஒருவரும் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவர்கள் மற்றும் சிறுமியிடம் பாலியல் உறவில் ஈடுபட்டவர்கள் என 40 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த உருளையான்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்திய நிறுவனத்தின் கட்டிடங்களை புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
