சின்னஞ்சிறு குழந்தையை கொடூரமாக தாக்கிய அத்தை.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே 8 வயது குழந்தையை தாக்கிய பெண், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குதிரைவட்டன் கால குலவிளையை சேர்ந்தவர் வினிஷா. இவருக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஏழு ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து தாயின் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவ தினத்தன்று வீட்டில் இருந்த பெண் குழந்தையை, வினிஷாவின் அண்ணி நிஷா கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்த வீடியோ காட்சி வெளியான நிலையில், தற்போது நிஷா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Next Story
