புகார் அளிக்க வந்தவரிடம் லஞ்சம் கேட்கும் உதவி ஆய்வாளர்

சென்னையில் லஞ்சப்புகாரில் சிக்கிய மத்திய குற்றப் பிரிவை சேர்ந்த 2 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புகார் அளிக்க வந்தவரிடம் லஞ்சம் கேட்கும் உதவி ஆய்வாளர்
Published on
சென்னையில் லஞ்சப்புகாரில் சிக்கிய மத்திய குற்றப் பிரிவை சேர்ந்த 2 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆவண மோசடி தொடர்பான புகார் அளிக்க மகேந்திரன் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரை அணுகியுள்ளார். அப்போது இந்த வழக்கை சுமூகமாக முடிப்பதாக கூறி மத்திய குற்றப்பிரிவின் உதவி ஆய்வாளர்கள் சிவஞானம், சந்தியா ஆகிய இருவரும் இரண்டரை லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளனர். இது தொடர்பான புகாரின்பேரில் காவல் ஆணையர் விஸ்வநாதன் 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இருவரும் லஞ்சம் கேட்பது குறித்த ஆடியோ வெளியாகி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com