2 லட்சம் ரூபாய்க்குள் நகைக்கடன் வாங்குபவர்கள் கவனத்திற்கு - ஆறுதலாக வந்த சேதி

x

2 லட்சம் ரூபாய்க்குள் நகைக்கடன் வாங்குபவர்கள் கவனத்திற்கு - ஆறுதலாக வந்த சேதி

சிறு தங்க நகை கடன்கள் வாங்குவோரின் தேவைகள் மோசமாக பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென, ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

தங்க நகை அடகு கடன் தொடர்பாக வங்கிகள் மற்றும் வங்கி சேவை அல்லாத நிதி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து ரிசர்வ் வங்கி அண்மையில் வரைவு விதிகளை வெளியிட்டது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் வழிகாட்டுதலின் கீழ், ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட தங்க பிணையத்திற்கு எதிரான கடன் வழங்குவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை நிதி சேவைகள் துறை ஆய்வு செய்தது.

சிறிய தங்க நகைக் கடன் வாங்குபவர்களின் தேவைகள் மோசமாகப் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக நிதி சேவை துறை ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

இதுபோன்ற வழிகாட்டுதல்களை கள அளவில் செயல்படுத்த நேரம் எடுக்கும் என்றும், எனவே 2026 ஜனவரி 1 முதல் மட்டுமே இதனை செயல்படுத்த ஏற்றதாக இருக்கலாம் என்றும் நிதி சேவைகள் துறை கூறியுள்ளது.

மேலும், சிறிய நகை கடன் வாங்குபவர்களுக்கு கடன்களை சரியான நேரத்தில் மற்றும் விரைவாக வழங்குவதை உறுதி செய்வதற்காக,

2 லட்சம் ரூபாய்க்கும் குறைவான சிறிய கடன் வாங்குபவர்கள் இந்த முன்மொழியப்பட்ட வழிமுறைகளின் தேவைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்றும் நிதி சேவைகள் துறை பரிந்துரைத்துள்ளது. வரைவு வழிகாட்டுதல்கள் குறித்து பெறப்பட்ட கருத்துக்களை ரிசர்வ் வங்கி மதிப்பாய்வு செய்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்