திருச்செந்தூர் செல்வோர் கவனத்திற்கு..நாளை இதற்கு அனுமதி இல்லை

x

கும்பாபிஷேகம் - மூலவர் முருகனை தரிசிக்க அனுமதி இல்லை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், நாளை நண்பகல்12 மணி வரை மூலவரான முருகனை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.15 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மும்முரமாக செய்து வருகிறது. அந்த வகையில், மூலவர் முருகனை தரிசிக்க வழங்கப்பட்ட அனுமதி, நாளை நண்பகல் 12 மணி வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள், மூலவர் அருகே இருக்கக்கூடிய சண்முக பெருமானை மட்டும் வழிபடுவதற்கு கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்