Parvathamalai| Flood| மக்கள் கவனத்திற்கு.. இன்று காலை 7.30 மணி முதல் ஆரம்பித்த தடை
மக்கள் கவனத்திற்கு.. இன்று காலை 7.30 மணி முதல் ஆரம்பித்த தடை
#parvathamalai #parvathamalaihills
திருவண்ணாமலையில் கனமழை - பருவதமலை ஏற பக்தர்களுக்கு தடை திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள பருவதமலையில் கனமழை காரணமாக, பக்தர்கள் மலை ஏறிச் சாமி தரிசனம் செய்ய இன்று ஒருநாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பக்தர்கள் கடந்து செல்லும் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இன்று காலை 7.30 மணி முதல் வனத்துறையினர் இந்தத் தடையை அமல்படுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு இதேபோன்று ஏற்பட்ட வெள்ளத்தில் சென்னையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உயிரிழந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
