CM Stalin | அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - முதல்வர் கைக்கு வந்த ஃபைல்
அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்ட கோரிக்கையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ககன் தீப் சிங் பேடி தலைமையிலான குழு, தனது முழு அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளது. பழைய, பங்களிப்பு மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டங்கள் குறித்து அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட முடிவுகளை முதலமைச்சர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
