அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்பு

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என கூறி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்பு
Published on

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என கூறி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் போடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், போடி சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். அவருடன் மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், போடி நகர செயலாளர் பழனிராஜ் உள்ளிட்ட பலரும் கையில் பதாகைகளை ஏந்தி திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.அதே போல் சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துக்கொண்டார். திமுக அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதில் திமுக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com