3 முறை தற்கொலை முயற்சி - மேம்பாலத்தில் இருந்து குதித்தவர் உயிரிழப்பு
திருவண்ணாமலையில் 3 முறை தற்கொலைக்கு முயன்றவர் இறுதியாக ரயில்வே மேம்பாலத்தில் இருந்த கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
செங்கம் அல்லியந்தலை சேர்ந்த லூக்காஸ் மதுபோதைக்கு அடிமையாகி, மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து வெளியேறிய அவர் பேருந்து மற்றும் லாரி முன் விழுந்து தற்கொலைக்கு முயன்றார். அதில் இருந்தும் உயிர் தப்பியவர், பின்னர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
