தலைமை செயலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி
தலைமை செயலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை புது வண்ணாரப்பேட்டை பர்மா காலனியில் வசித்து வரும் கோவிந்தனின் பக்கத்து வீட்டுக்காரர், தனது வீட்டை மறுசீரமைப்பு செய்யும்போது, கோவிந்தனின் வீட்டு கழிவறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் புகாரளிக்கவே, அங்கிருந்த பெண் உதவி ஆய்வாளர் அன்னலட்சுமி சரியாக விசாரிக்கவில்லை எனக்கூறி, முதல்வரின் தனி பிரிவுக்கு புகார் அளித்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் உதவி ஆய்வாளர் மிரட்டியதாக, சென்னை தலைமை செயலகம் முன் அவர் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். காவலர்கள் அவரை தடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். புகார் அளித்த நபரை மிரட்டிய பெண் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story
