குழந்தையைகடத்த முயற்சி? போலீஸ் முன்பே பெண்ணை ரவுண்டு கட்டி வெளுத்த மக்கள்
திருப்பத்தூர் அருகே அங்கன்வாடி செல்லும் ஐந்து வயது சிறுமியை கடத்த நினைத்ததாக, பெண் மீது பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் புனிதா. இவரது ஐந்து வயது குழந்தையை வழக்கம் போல அங்கன்வாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பெண் ஒருவர் குழந்தையை கடத்தி செல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, அப்பெண்ணிடம் புனிதா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த பொது மக்கள் பெண்ணை எந்த விசாரணையும் இன்றி தாக்க தொடங்கினர்.
Next Story
