இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி ரூ.1 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்
இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி - ரூ.1 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்
தூத்துக்குடி அருகே மூட்டை மூட்டையாக கடத்தப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் வைப்பார் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் ஆந்திராவில் இருந்து வந்த ஈச்சர் வாகனத்தை சோதனை செய்தபோது, தக்காளி கூடைகளுக்கு பின்னால் 7 மூட்டைகளில் கஞ்சாவை கடத்தியது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என கூறியுள்ள போலீசார், அவற்றை பறிமுதல் செய்து, ஈச்சர் வாகனத்தை ஓட்டி வந்த நாஞ்சில்ராஜ் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்
Next Story
