ஆர்எஸ்எஸ் பிரமுகரை கொலை செய்ய முயற்சி - தலைக்கவசம் அணிந்த 2 பேர் தாக்கியதில் படுகாயம்

கோவை அருகே ஆர்.எஸ்.எஸ். பிரமுகரை தலைக்கவசம் அணிந்து வந்த மர்மநபர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்எஸ்எஸ் பிரமுகரை கொலை செய்ய முயற்சி - தலைக்கவசம் அணிந்த 2 பேர் தாக்கியதில் படுகாயம்
Published on
கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்ற ஆர்எஸ்எஸ் பிரமுகர், மரச்செக்கு எண்ணெய் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது கடைக்குள் புகுந்த தலைக்கவசம் அணிந்த மர்மநபர்கள் இருவர், அவரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடினர். இதில் படுகாயம் அடைந்த சூரிய பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை முன்பு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் திரண்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, சூரியபிரகாஷை மர்ம நபர்கள் தாக்கும் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com