மனைவி மீது தாக்குதல் - மன உளைச்சலால் கணவன் தற்கொலை
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே அம்பாளப்பட்டியில் தனது மனைவியை தாக்கி ஆடைகளை கிழித்த வீடியோ வை பார்த்த கணவன் மன உலைச்சலில் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்கொலை செய்த முரளிக்கும் அவரது உறவினர்களுக்கும் நில தகராறு இருந்து வந்த நிலையில், எதிர்த் தரப்பைச் சேர்ந்தவர்கள் முரளியின் மனைவியைத் தாக்கி ஆடைகளை கிழித்துள்ளனர். இந்த வீடிவோவை பார்த்து மனமுடைந்த முரளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தாக்குதல் சம்பவம் குறித்து புகார் கொடுத்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்க தாமதித்ததே சம்பவத்திற்கு காரணமென இறந்தவரின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
Next Story
