

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டி பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஓமலூர் காவல் உதவி ஆய்வாளரை முன்னாள் ஊராட்சி தலைவர் வேலாயுதத்தின் மகன் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் செல்வம் ஓமலூர்அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்திய இளைஞரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.