ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை : கைது செய்ய முயன்ற காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் முயற்சி

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் பகுதியில் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்க முயன்ற இளைஞர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை : கைது செய்ய முயன்ற காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் முயற்சி
Published on
இந்திரா நகரை சேர்ந்தவர் ராகுல் என்ற இளைஞர் மீது ஏற்கனவே லாட்டரி விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மீண்டும் லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராகுலை பிடிப்பதற்காக காட்டுமன்னார்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் தனசேகரன் முற்பட்டார். அப்போது, ராகுல் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனசேகரனை தாக்க முயன்றுள்ளார். பின்னர், தனசேகரன் அளித்த புகாரின் பேரில், ராகுல் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ராகுல் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com