Kanyakumari | மினி பேருந்தில் ஏறி நடத்துனர் மீது தாக்குதல் - தனியார் பஸ் கண்டக்டர்கள் அடிதடி..
கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் மினிபேருந்துகளை இயக்குவதில் ஏற்பட்ட தகராறில் நடத்துநர்கள் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தக்கலையில் இரண்டு மினி பேருந்துகளை சேர்ந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், மேக்காமண்டபம் செல்லும் மினிபேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தபோது, திடீரென மற்றொரு பேருந்து நடத்துனர் ராஜா, பேருந்தில் ஏறி, நடத்துனர் ஆனந்தராஜை தாக்கியுள்ளார். இதனால் பயணிகள் அச்சமடைந்தனர்.
Next Story
