Ex. பாஜக நிர்வாகி மீது தாக்குதல் | பணம் மற்றும் ஸ்கூட்டர் வழிப்பறி | தேனியை அதிர வைத்த இருவர்
முன்னாள் பாஜக நிர்வாகியை தாக்கி வழிப்பறி - 2 பேர் கைது
தேனி மாவட்டம் கம்பத்தில் முன்னாள் பாஜக தலைவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கம்பம் தாத்தப்பன் குளம் பகுதியை சேர்ந்தவர் திருமால். முன்னாள் பாஜக நிர்வாகியான இவர் மதுரையில் நடைபெற்ற முருகன் பக்தர் மாநாட்டில் பங்கேற்று விட்டு தனது இருச்சக்கர வாகானத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, இரண்டு பேர் அவரை வழிமறித்து ப்ளேடால் தாக்கி 500 ரூபாய் பணம் மற்றும் ஸ்கூட்டரை பறித்து சென்றனர். இது குறித்து திருமால் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ராஜ்குமார் மற்றும் வடிவேல் ஆகிய இருவரை கைது செய்தனர்.
Next Story
