சட்ட அமைச்சர் அலுவலகம் மீது தாக்குதல் : அலுவலக கண்ணாடி சேதம்- போலீஸ் விசாரணை

விழுப்புரம் நகரில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அலுவலகம் சேதம் அடைந்தது.
சட்ட அமைச்சர் அலுவலகம் மீது தாக்குதல் : அலுவலக கண்ணாடி சேதம்- போலீஸ் விசாரணை
Published on

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் அருகில் செயல்பட்டு வரும் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அலுவலகத்தை அவரது உதவியாளர் திறக்க வந்துள்ளார். அப்போது, அலுவலக கண்ணாடி உடைந்து கிடப்பதை அவர் பார்த்துள்ளார். உள்ளே சென்று பார்த்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அமைச்சரின் உதவியாளர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com