Kanniyakumari | Crime | மாணவிகள் முன்பு வீலிங் செய்து அட்ராசிட்டி | சிக்கியதும் பம்மிய இளைஞர்

மாணவிகள் முன்பு வீலிங் செய்து அட்ராசிட்டி | சிக்கியதும் பம்மிய இளைஞர்

மாணவிகள் முன்பு வீலிங் செய்து அட்ராசிட்டி | போலீசாரிடம் சிக்கியதும் பம்மிய இளைஞர்

கன்னியாகுமரி அருகே பள்ளி மாணவிகள் முன்பு போக்குவரத்து விதிகளை மீறி மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்த இளைஞரை போலீசார் பிடித்ததைத் தொடர்ந்து, அவர் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஞ்சுகிராமம் பகுதியைச் சேர்ந்த ஜெரி என்ற இளைஞர், தலைக்கவசம் அணியாமல் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து, அதன் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, கன்னியாகுமரி போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி, அவரது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மேலும், இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என இளைஞர் மன்னிப்பு கேட்டு வெளியிட்ட வீடியோவும் தற்போது பரவி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com