பெண்கள் நடத்தும் கடையில் அராஜகம்.. பேரூராட்சி தலைவர் செய்த அட்டூழியம் - பரபரப்பு காட்சிகள்

ஆத்தூர் அருகேயுள்ள முத்துமலை முருகன் கோயில் நடைபாதை கடையில், பேரூராட்சி தலைவர் அராஜகம் செய்யும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையத்தில், முத்துமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்தநிலையில், கோயில் நடைபாதை கடையிலிருந்த குளிர்பானம் மற்றும் குடிநீர் பாட்டில்களை, ஏத்தாப்பூர் பேரூராட்சி தலைவர் அன்பழகனும் அவரது நண்பர்களும் சாலையில் தூக்கி வீசி, அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com