Kilambakkam | கிளாம்பாக்கம் அருகே 7 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை

கிளாம்பாக்கம் அருகே 7 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை

#kilambakkam #child 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது கிளாம்பாக்கம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை கிளாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அன்பரசு என்பவர் தனியார் மருத்துவமனையில் அட்டெண்டராகப் பணியாற்றி வந்தார். இவர், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததுடன். சிறுமியை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து, சிறுமி அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் நடந்ததைக் கூற, அவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில், அன்பரசு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com