ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

மன்னார்குடியில், ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி செய்த மர்ம நபர்களை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

மன்னார்குடியில், ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி செய்த மர்ம நபர்களை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், அத்திக்கடை பகுதியில், இயங்கி வரும் தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்ற பொதுமக்கள் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வந்த போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மர்ம நபர்கள் கடப்பாறையால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சித்து தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com