Tirupur | ATM | மனிதரிடம் ஏமாந்த ATM "இத்தனைக்கும் எந்த ட்ரிக்கும் யூஸ் பண்ணல"
திருப்பூர் மங்கலம் ரோடு, பாரப்பாளையத்தில் உள்ள தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம்., இயந்திரத்தில் கள்ள நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டது அண்மையில் தெரியவந்தது. இதுதொடர்பாக கவுதம் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது முருகம்பாளையம் கண்ணன் காட்டேஜ் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் ராஜேந்திரனிடம் அவர் வட்டிக்கு 40 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதும், அதில் 6 ஆயிரம் ரூபாய்க்கு கள்ள நோட்டுக்களை மறைத்துவைத்து கொடுத்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, ராஜேந்திரனை போலீசார் கைது செய்து கலர் ஜெராக்ஸ் இயந்திரம் மற்றும் 12 எண்ணிக்கையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Next Story
